Total Pageviews
Tuesday, 23 December 2014
Friday, 19 December 2014
இயக்க உணர்வு கொள்வோம் ! வைரவிழாவில் சங்கமிப்போம் !
NFPE DIAMOND JUBILEE INVITATION RELEASED ! ALL OUR LEADERS AND COMRADES ARE WELCOME TO THE HISTORIC FUNCTION !
இயக்க உணர்வு கொள்வோம் !
வைரவிழாவில் சங்கமிப்போம் !
அன்புத் தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் ! .
NFPE தமிழ் மாநில இணைப்புக்குழுவின் சார்பில் நம்முடைய சம்மேளன வைர விழா மற்றும் நம்முடைய இயக்கத்தின் ஒய்வு பெற்ற மூத்த தலைவர்களுக்குப் பாராட்டு விழா நிகழ்வு குறித்த அழைப்பிதழ்
கீழே காணவும்.
இது நமது குடும்ப விழா ! அனைத்து தலைவர்களையும் , நம் இயக்கத்தின் அகில இந்திய சங்கங்களின் /மாநிலச் சங்கங்களின் நிர்வாகிகளையும் /கோட்ட/ கிளைச் சங்கங்களின் தளபதிகளையும் அன்பான தோழர்களையும் , தோழியர்களையும் இருகரம் நீட்டி வருக வருக என வரவேற்புக் குழு சார்பில் இனிதே வரவேற்கிறோம்.
எந்த வேலை இருந்தாலும் தள்ளி வைத்து விட்டு இந்த விழாவில் கலந்துகொண்டிட வேண்டுகிறோம்.
கடந்த 60 ஆண்டுகளில் நம் இயக்கத்திற்காக தங்கள் உடல் , பொருள் , நேரம் என்று எல்லாவற்றையும் அர்ப்பணித்து அயராது பணியாற்றிய மூத்த தலைவர்களை நாம், நம் காலத்தில் ஒருசேர அழைத்து பாராட்டு செய்வது என்பது ஓர் அரிய நிகழ்வு ஆகும். அரிய வாய்ப்பும் ஆகும் .
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும் .
சென்னை மாநகரமே அஞ்சல் தோழர்களால் நிரம்பட்டும் !
இன்று அஞ்சல் துறையை CORPORATISE செய்திட TASK FORCE ஆல் திட்ட முன் வடிவு அரசுக்கு அளிக்கப் பட்டுள்ளது. அதனை எதிர்த்து போராட நம் சம்மேளன வரலாறு நமக்கு உணர்வுகளை அளிக்கட்டும் !.
நம் மூத்த தலைவர்களின் போராட்ட வரலாறு நமக்கு வழி காட்டட்டும் ! உணர்வு கொள்வோம் ! உறுதி கொள்வோம் !
தியாகங்களை நாமும் மேற்கொள்ள தயாராவோம் !
இலாக்கா காத்திடுவோம் ! வைரவிழாவில் சங்கமிப்போம் !
Thursday, 11 December 2014
வாழ்வா ? சாவா ? போராட்டம்
WHETHER DEPARTMENT OF POSTS TO BE CORPORATISED ? DANGER AHEAD ?
வாழ்வா ? சாவா ? போராட்டம்
அன்புத் தோழர்களுக்கு வணக்கம் . நாம் நம்முடைய மாநிலச் சங்கத்தின் சார்பில் ஏற்கனவே நடத்திய நான்கு மண்டலங்களின் பயிற்சி வகுப்பில்
நம் அஞ்சல் மூன்று மாநிலச் செயலரின் தலைப்பான " அஞ்சல் துறையின் எதிர்காலமும் நம் தொழிற் சங்க கடமையும் " என்ற தலைப்பில் நம் துறை எதிர்காலத்தில் BSNL போல CORPORATION ஆக்கப் பட்டு தனியார் மயத்தை நோக்கி செல்ல உள்ளது என்பதை சுட்டிக் காட்டி வந்துள்ளோம் .
NATIONAL POSTAL POLICY 2012 இன் அடிப்படையிலும் I.T. MODERNISATION PROJECT 2012 இன் அடிப்படையிலும் அரசின் இந்த திரை மறைவுத் திட்டம் நிறைவேற்றப்பட உள்ளதன் ஆபத்தை தெளிவாகவே சுட்டிக் காட்டி வந்துள்ளோம்.
தற்போது " TASK FORCE ON LEVERAGING THE POST OFFICE NETWORK " என்பது அமைக்கப்பட்டு அதன் அறிக்கையும் அரசுக்கு அளிக்கப்பட்டு விட்டது. நாம் எதிர்பார்த்தபடியே நம் துறையை CORPORATISE செய்திட அதில் பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன என்பது " NOW THE CAT IS JUMPED OUT OF THE BAG " என்ற மரபுச் சொல்லின் (IDIOM) அடிப்படையில் நம்முடைய மாநிலச் சங்கம் ஏற்கனவே கூறி வந்த செய்தி உண்மை என அறியப்படுகிறது .
இந்திய அஞ்சல் துறை ஆறு பகுதிகளாகப் பிரிக்கப் பட்டு 'INDIA POST (FINANCIAL AND OTHER SERVICES) CORPORATION என்று மாற்றப்பட பரிந்துரைக்கப்பட்டுள்ளது . இது COMPANY சட்டத்தின் கீழ் கொண்டுவரப்படும்.
இதனை ஒட்டியே நம்முடைய மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன
மாபொதுச் செலாளர் தோழர். M . கிருஷ்ணன் அவர்கள் கீழே காணும் கட்டுரையை நமக்கு அளித்துள்ளார். முழுவதும் இதனை படித்திட நாம் வேண்டுகிறோம்.
அரசின் இந்த மோசமான , நம்முடைய இலாகாவையே தனியாருக்கு தாரை வார்த்திடும் முயற்சியை நாம் முறியடித்திட வேண்டும். தொடர் போராட்டங்களை நாம் நடத்திட வேண்டிய சூழ்நிலையில் தற்போது இருக்கிறோம். இதனை தெளிவாக அடிமட்ட ஊழியர்கள் வரை கொண்டு செல்ல வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.






Thursday, 4 December 2014
Subscribe to:
Posts (Atom)