Total Pageviews

Tuesday, 5 November 2013

Results of Direct Recruitment - PA/SA (April/Aug-2013) declared in Tamilnadu Circle-

Results of Direct Recruitment - PA/SA (April/Aug-2013) declared in Tamilnadu Circle-

அன்புத் தோழர்களே !  இளைய தோழர்கள்  இடைவிடாது கேட்டுக் கொண்டிருந்த  எழுத்தர்  தேர்வின் முடிவுகள் தமிழக அஞ்சல் வட்டத்தில் இன்று வெளியிடப்பட்டது . கீழே காணும்    இணைப்பை ' கிளிக் " செய்து  தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ள வேண்டுகிறோம்.-


புதிதாக  இந்த இலாக்காவில் இணைய உள்ள  இளைய உள்ளங்களுக்கு , எங்கள் இளைய தோழர் மற்றும் தோழியர்களுக்கு  எதிர்காலம் இனிதாக அமைய  NFPE  அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் மூன்றாம் பிரிவு  தமிழ் மாநிலச் சங்கத்தின் அன்பான வாழ்த்துக்கள் ! 

உங்கள் எதிர்காலத்திற்கு , உங்கள் உரிமைகளுக்கு , உங்களுக்காக நீங்களே எங்களுடன் இணைந்து குரல் கொடுத்திட  நீங்கள் இணைய வேண்டிய சங்கம் AIPEU   GROUP 'C'  சங்கம் !

என் அன்பான கோட்ட/ கிளைச் செயலர்களே !
புதிய தோழர்களை  நீங்கள் அரவணைத்து  நமது சங்கத்தின் 
தியாகங்களை / வெற்றிகளை எடுத்துச் சொல்லி  நம்முடன் 
இணைந்து பணியாற்ற அழைப்பு விடுத்திடுங்கள் !
பணியில் சேர அவர்கள் வரும்  நாட்களில் அவர்களுக்கு ஆதரவாக இருந்து  உதவிடுங்கள் ! 
அவர்களின்  தேவைகளை அறிந்து  உதவிக் கரம் 
நீட்டிடுங்கள் !

 இளைய தோழர்களான உங்களை 
 நாங்கள் வருக வருக என்று இரு கரம் நீட்டி வரவேற்கிறோம் !

அன்புடன் 

J . இராமமூர்த்தி, 
மாநிலச் செயலர், அஞ்சல் மூன்று 
தமிழ் மாநிலம்.

Monday, 4 November 2013

மேற்கு மண்டலத்தின் BI-MONTHLY MEETING

மேற்கு மண்டல PMG  உடன் இரு மாதங்களுக்கு ஒரு முறையான பேட்டி 

மேற்கு மண்டலத்தின்  BI-MONTHLY MEETING  எதிர் வரும் 25.11.2013 அன்று நடைபெற அறிவிக்கப் பட்டுள்ளது. மேற்கு  மண்டலத்தில் உள்ள கோட்ட/ கிளைச் செயலர்கள் தங்கள் பகுதிப் பிரச்சினைகளை  மாநில/ மண்டலச் செயலரிடம் எதிர்வரும் 13.11.2013 க்குள் கிடைக்குமாறு  அனுப்பி வைத்திட வேண்டப் படுகிறார்கள் 

மேலும்  நாம் ஏற்கனவே மேற்கு மண்டல கோட்ட/ கிளைச் செயலர்களின் கூட்டத்தில் அறிவித்தபடி ,  கோட்ட / கிளைச் செயலர்களிடமிருந்து பெறப்பட்ட பிரச்சினைகள்  பட்டியலிடப்பட்டு MEMORANDUM  ஆக தயார் செய்யப்பட்டு தற்போது  PMG, WR க்கு அனுப்பப்பட வுள்ளது . அதன் நகல் மேற்கு மண்டலத்தில் உள்ள அனைத்து கோட்ட/ கிளைச் செயலர்களுக்கும்  அனுப்பப்படுகிறது .  அதன் மீது தங்கள் கருத்துக்களை எதிர்வரும் 23.11.2013 க்குள் மாநில/ மண்டலச் செயலருக்கு தெரிவித்திட  வேண்டுகிறோம். அதன் மீது 25.11.2013  அன்று  PMG,WR  அவர்களுடன் விவாதிக்கப்படும்  என்பதை இந்த வலைத்தள செய்தியாக பதிவு செய்கின்றோம்.  

இந்த செய்திகளை  முன்னறிவிப்பாக கொண்டு  மாநிலச் சங்க நிர்வாகிகள் மற்றும் கோட்ட/ கிளைச் செயலர்கள் செயல் படுமாறு அன்புடன் வேண்டுகிறோம். 

அன்புடன்  
மாநிலச் செயலர் , அஞ்சல் மூன்று ,
 தமிழ் மாநிலம்.
  ALL INDIA POSTAL EMPLOYEES UNION-GROUP-C , WESTERN REGION 
                                                                     REGIONAL REPRESENTATIVE
                              C.SANJEEVI,ASST.CIRCLE SECRETARY @ Suramangalam H.P.O.636005
MOBILE  NO.9442979586                                                                                email : nfpesalemwest@gmail.com
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- 
 No. AIPEU/P3/   15   /WR/  dated @ Mettur Dam R.S. 636402 the   04.11.2013
அன்புடன் தோழர்.                 அவர்களுக்கு,
வணக்கம். நமது கோவை மேற்கு மண்டல  P M G , அவர்களுடனான BI-MONTHLY MEETING
வரும் 25.11.2013  அன்று காலை 11.00  மணியளவில் நடைபெறுகிறது. மாநிலச் செயலர் தோழர் J.ராமமூர்த்தி அவர்களும் , மண்டலச் செயலரும்  BI-MONTHLY MEETING இல் கலந்து கொள்கின்றனர். எனவே தங்கள் கோட்டத்தில் கோட்ட மட்டத்தில் தீர்க்க முடியாத பிரச்சனைகளை பற்றி உடனே தங்கள் கோட்ட அதிகாரியால் அப்பிரச்சனைக்கு கொடுக்கப்பட்ட பதிலுடன் உடன் மண்டல செயலருக்கு அனுப்பி வைக்கவும் .  BI-MONTHLY MEETING முடிந்தவுடன் P.M.G.அவர்களிடம்  INFORMAL MEETING கோரப்பட்டுள்ளது. எனவே கலந்து கொள்ள விருப்பம் உள்ள கிளை/கோட்ட செயலர்கள் 25.11.2013  அன்று கோவை மண்டல அலுவலகத்திற்கு வரவேண்டுகிறோம்.
                                   உங்களின்
C,.சஞ்சீவி ,                     D. எபினேசர் காந்தி                                                                                                                                                                          A.ராஜேந்திரன்           
மண்டல செயலர் ,            மாநில உதவி தலைவர் ,         மாநில அமைப்பு  தலைவர்


Sunday, 3 November 2013

COMRADE NAGARATHINAM CRM RETIRED FROM SERVICE ON 31/10/2013

COMRADE NAGARATHINAM CRM RETIRED FROM SERVICE ON 31/10/2013


        NAMAKKAL DIVISIONAL BRANCH OF P3,P4,AND GDS  UNION WISH HIM A HAPPY RETIRED LIFE.

Tuesday, 29 October 2013



விதிகள் அறிவோம் --- ஆக்கம் மாநில செயலர்  .

1. Whether Dies non, EXOL without MC etc will cause postponement of increment which was available earlier?

As per the R. P. Rules 2008, the date of increment will be 1st July every year for all employees. If an employee has completed six months or more after his last increment in July, he is entitled for next annual increment. As such there is no effect for Dies non, EXOL without MC etc up to six months in one year starting from July to June next year.

2. Whether the current pay bands remove the stagnation? Or is there any provision of stagnation increments etc?

There will be no stagnation as per the revised rules. If an employee reaches maximum of his pay band, after one year he will be placed in the next pay band providing him one increment. Thus he will move up to pay band 4 and there is no chance of stagnation.

3. Suppose, an official availed EOL (Without MC) for more than six months and he is not having six months qualifying service as on 1st July what will be the fate of his increment?

No. He will not be drawn the increment. If qualifying service is less than six months from 1st July of the previous year till 30th June of the year the date of increment shall be postponed to 1st July of the next year.

4. An official is ordered to officiate in higher Post first for 10 days and subsequently extended for another 10 days. Whether he is entitled for higher officiating pay?

Yes. An official officiating in higher post for less than 14 days, he is not entitled for higher pay. However, even if the first spell is less than 14 days but subsequently extended, the official officiating in the higher post is entitled for higher pay as per the Directorate letter No. 9-25/82-SPG/SPB II dt. 29.05.86.

5. What is the maximum amount of salary that can be attached?

(i) In case of decree for maintenance: (Gross emoluments – allowances exempted) X 2/3
(ii) In case of other decrees: (Gross emoluments – allowances exempted – Rs.1000/-) X 1/3
(Rules 74 of CGA (R & P) Rules 1983) 


Monday, 28 October 2013

COM. S.C.JAIN , EX-CIRCLE SECRETARY, AIPEU GR.C, M.P. CIRCLE REINSTATED - HATS OF TO LEADERS OF NFPE !

 COM. S.C.JAIN  REINSTATED


             Orders reinstating into service  Com. S.C.Jain  Ex-Circle
 Secretary P3 NFPE Madhya Pradesh Circle  who was compulsorily
 retired from service for trade union activities, issued today 
asper the direction given by Directorate to the CPMG.

             NFPE and P3 CHQ has taken up the case with Secretary, 
Department of Posts. This is the great victory of NFPE in the fight
 against trade union victimization.

                                     Red Salute to all comrades


== M.Krishnan  Secretary General NFP

Friday, 25 October 2013

தோழர் கோபு கோவிந்தராஜன் அவர்கள் மாநில செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தமிழ் மாநில அஞ்சல் நான்கின் செயற்குழு கூட்டம் 
          இன்று 24.06.2013-ல் நடைபெற்ற அஞ்சல் நான்கின் மாநில செயற்குழு கூட்டத்தில் அகில இந்திய அமைப்பு செயலாளர் தோழர் கோபு கோவிந்தராஜன் அவர்கள் மாநில செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

          அதே போன்று காலியாக இருந்த மாநில அமைப்பு செயலாளர் பதவிக்கு திருச்சி கோட்ட செயலாளர் தோழர் S.கோவிந்தராஜன் அவர்கள் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.



          புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை NFPE சம்மேளனத்தின் துணை பொது செயலாளர் தோழர் K.ரகுபதி, அகில இந்திய அஞ்சல் மூன்று சங்கத்தின் செயல் தலைவர் தோழர் N.G., தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கத்தின் மாநில செயலாளர் தோழர் J.ராமமூர்த்தி ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். மாநில செயலாளர் தோழர் V.ராஜேந்திரன் முன்னிலையில் மாநில தலைவர் தோழர் G.கண்ணன்தலைமையேற்று நடத்திய மாநில செயற்குழு  கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்ட அகில இந்திய அஞ்சல் நான்கின் பொது செயலாளர் தோழர் ஈஸ்வர் சிங் தபாஸ் இன்றைய சூழ்நிலைகளை விளக்கி சிறப்புரையாற்றினார்.

          இறுதியாக மாநில பொருளாளர் தோழர் R.வெங்கடரமணி நன்றி கூற செயற்குழு கூட்டம் இனிதே முடிவடைந்தது. 

 புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில நிர்வாகிகளுக்கு NAMAKKAL கோட்ட அஞ்சல் நான்கு,P3 ,GDS சங்கம் வீர வாழ்துக்களையும் வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறது.