தமிழ் மாநில அஞ்சல் - RMS இணைப்புக்
குழுக் கூட்டம்
தமிழ் மாநில அஞ்சல் -RMS இணைப்புக் குழுவின் கூட்டம் கடந்த 17.05.2014 சனி மாலை சென்னை சென்ட்ரல் அருகில் உள்ள RED BUILDING வளாகத்தில் அதன் தலைவர் தோழர். K . ராஜேந்திரன்(RMS நான்கு ) அவர்கள் தலைமையில் கன்வீனர் தோழர். J . ராமமுர்த்தி (அஞ்சல் மூன்று) அவர்கள் துவக்கி வைக்க இனிதே நடைபெற்றது.
கூட்டத்தில் தமிழ் மாநில NFPE இன் உறுப்பு சங்கங்களின் மாநிலச் செயலர்கள் தோழர். S . ரவிச்சந்திரன், அஞ்சல் நான்கு, K . சங்கரன், RMS மூன்று, B . சங்கர், ACCOUNTS , S . அப்பன்ராஜ், SBCO மற்றும் அஞ்சல் மூன்றின் தலைவர் தோழர். J . ஸ்ரீ வெங்கடேஷ், கணக்குப் பிரிவின் தலைவர் தோழர். சந்தோஷ் குமார், அதன் முன்னாள் மாநிலச் செயலர் தோழர். R .B . சுரேஷ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். GDS மற்றும் நிர்வாகப் பிரிவு மாநிலச் செயலர்கள் பணி நிமித்தம் வெளியூர்களில் இருந்ததால் கலந்துகொள்ள முடிய வில்லை என்று தெரிவித்திருந்தனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட
முக்கிய தீர்மானங்கள் :-
1. NFPE சம்மேளனத்தில் வைர விழா நிகழ்வை தமிழகத்தில் இணைப்புக்
குழு சார்பாக சிறப்பாக நடத்துவது.
a ) சென்னையில் இந்த விழாவை நடத்துவது.
b ) எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21 அல்லது 28 தேதிகளில் ஏதேனும்
ஒரு தேதியில் இதனை நடத்துவது.
c ) இதற்கான நிதித் தேவையை NFPE இன் அனைத்து உறுப்பு
சங்கங்களும் பகிர்ந்து அளிப்பது .
d ) இதற்கென விழாக் கமிட்டி தனியே அமைப்பது.
e ) தமிழக NFPE இயக்கத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற அனைத்து
முன்னாள் , மாநிலச் செயலர்கள், மாநிலத் தலைவர்கள் ,
சம்மேளன மற்றும் அகில இந்திய சங்கங்களின் முன்னாள்
பொதுச் செயலர்கள் அனைவரையும் இந்த நிகழ்வில் அழைத்து
அவர்களை கௌரவிப்பது .
2. எதிர்வரும் 30.06.2014 அன்று அரசுப் பணி நிறைவு பெரும் தமிழ் மாநில
அஞ்சல் - RMS இணைப்புக் குழுவின் தலைவர் தோழர். K . ராஜேந்திரன்
அவர்களுக்கு 29.06.2014 அன்று திருச்சியில் நடைபெறும் பாராட்டு
நிகழ்வில் அனைத்து மாநிலச் செயலர்களும் கலந்துகொண்டு
இணைப்புக் குழு சார்பாக அவர்களை கௌரவிப்பது.(இதற்கென
நிகழ்வில் தனி நேரம் ஒதுக்கப்படும் )
3. மாநில கூட்டு ஆலோசனைக் குழுவுக்கான ஊழியர் பிரச்சினைகளை
அனைத்து மாநிலச் செயலர்களும் எதிர்வரும் 31.05.2014 க்குள் அதன்
செயலருக்கு அளிப்பது.
4. a )மாநில கணக்குப் பிரிவு ஊழியர்களுக்கு எதிராக பழிவாங்கும்
மற்றும் அடாவடி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் GM FINANCE
நிர்வாகத்தை கண்டித்து எதிர்வரும் 20.05.20104 அன்று மாநில
கணக்குப் பிரிவு அலுவலகத்திற்கு முன்னால் நடைபெறும் தார்ணா
போராட்டத்தில் அனைத்து மாநிலச் செயலர்களும் , நிர்வாகிகளும்
கலந்து கொண்டு முழு ஆதரவினை அளிப்பது.
b )சென்னை பெருநகர் பகுதியில் பணியாற்றும் அனைத்து
அமைப்புகளில் இருந்தும் ஊழியர்களை பெருமளவில் கலந்து
கொள்ளச் செய்வது.
c ) அஞ்சல் -RMS இணைப்புக் குழுவின் சார்பாக CPMG இன் உடனடித்
தலையீடு வேண்டி பிரச்சினைகளை MEMORANDUM ஆக அவரிடம்
அளித்துப் பேசுவது.
d) இது குறித்து அஞ்சல் -RMS இணைப்புக் குழு சார்பாக தனியே
சுற்றறிக்கை வெளியிடுவது .
d ) பிரச்சினைகள் தீர்க்கப் படவில்லை என்றால் இணைப்புக் குழு
சார்பாக CPMG அலுவலக வாயிலில் அனைத்து மாநிலச்
சங்கங்களும் போராட்டத்தில் ஈடுபடுவது.
அன்புத் தோழர்களே !
இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட முக்கிய தீர்மானமான கணக்குப் பிரிவு ( AUDIT & ACCOUNTS ) ஊழியர்களின் பிரச்சினைகளை தீர்த்திட, எதிர்வரும் 20.05.2014 அன்று சென்னை எழும்பூர் எத்திராஜ் சாலையில் அமைந்துள்ள GM FINANCE அலுவலக வளாகத்தில் நடத்தப் படும் தார்ணா போராட்டத்தில், சென்னை பெருநகர் பகுதியில் பணி புரியும் அஞ்சல் மூன்று, அஞ்சல் நான்கு , RMS மூன்று ,RMS நான்கு , நிர்வாகப் பிரிவு , கணக்குப் பிரிவு, SBCO , GDS உள்ளிட்ட பகுதிகளின் ஊழியர்கள் பெருமளவில் கலந்துகொண்டு போராட்டத்திற்கு முழு ஆதரவு அளித்திட தமிழ் மாநில அஞ்சல் -RMS இணைப்புக் குழு வேண்டுகிறது.
கோட்ட/ கிளைச் செயலர்களுக்கு தனியே செய்தி அனுப்பப்படும் . இதற்கான சுற்றறிக்கை முன்னதாகவே இந்த வலைத்தளத்தில் பிரசுரிக்கப் படும்.
தோழமை வாழ்த்துக்களுடன்
அஞ்சல் - RMS இணைப்புக் குழு,
தமிழ் மாநிலம், சென்னை 600 005.
No comments:
Post a Comment