கவிதை:
பெருமை கொள்வோம் !
யாரு போட்ட திட்டமோ ? அஞ்சல் துறையை
ஆறு கூறாக்க வருகிறதாம் புது சட்டமாம்
ஆம் ஆத்மி சாயமெல்லாம் அஞ்சு வருஷத்தில் போயாச்சு
மெக்கன்சியின் மேதாவிதனம் மெல்ல மறைந்து போயாச்சு
கட்டி முடிச்ச ATM யும் காட்சி பொருளாய் ஆயாச்சு
இன்டர்நெட் வேகத்தில இருந்த ஆளும் போயாச்சு --ஆனாலும்
வாடிக்கையாளரை தக்க வைப்பதாய் புது வேடிக்கையும் நடக்குது
Speedpost நீ அனுப்பு -Epost நீ கொடு
Mystamp நீ வாங்கு -Philately நீ சேரு --என்று
இருப்பவரையே இழுத்து பிடித்து இலக்கை எட்ட சொல்லுது
58 சாப்ட்வேரில் தனி ஆளாய் வேலை பார்த்து
88 மெயிலுக்கு விளக்கம் வேறு கொடுத்தாலும்
மேசை மேல தூசியை காட்டி மேலிடமும் பாயுது
மன உளைச்சலில் ஊழியர்களின் மனமெல்லாம் நோகுது
ஒரு நாள் விடுப்புக்கும் ஒன்பது விளக்கம் தேவைபடுது
ஓயாம கேட்காதே என்று ஒரே பதிலில் முடிக்குது
அடக்குமுறை ,ஆணவம் -அடிமை --அத்துமீறல்
வெள்ளைக்காரன் காலம் போல வேகமாக பரவுது
வேடிக்கை பார்பதற்கும் -வெஞ்சாமரம் வீசுவதற்கும்
NFPE --ஆட்சியாளரால் பிறந்தது அல்ல
இரத்தசாட்சியா ளர்களால் பிறந்தது
நினைவு கொள்வோம் --பெருமை கொள்வோம்
NFPE இல் இருப்பதை பிறப்பின் பாக்கியம் என்போம்
NFPE இல் தொடர்வதை பிறவி பயன் என்போம்
இன்குலாப் ஜிந்தாபா த் SKJ
நன்றி: http://www.nfpetirunelveli.blogspot.in/
No comments:
Post a Comment