Total Pageviews

Tuesday, 3 February 2015

JCM ( NATIONAL COUNCIL ) - JCA உயர் மட்ட ஆலோசனைக் கூட்டம்

JCA ( NC JCM ) SOUTH ZONE MEETING ON 05.02.2015 AT O/O GEN. SEC., SRMU

JCM ( NATIONAL COUNCIL ) - JCA  
உயர் மட்ட ஆலோசனைக் கூட்டம் 

ரயில்வே , பாதுகாப்பு  மற்றும்  அஞ்சல் (NFPE & FNPO) , வருமானவரி   உள்ளிட்ட மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன அமைப்பில் உள்ள சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம்  எதிர்வரும்   05.02.2015 அன்று மதியம் 02.00 மணியளவில்   சென்னை மூர் மார்க்கெட் பகுதியில் உள்ள SRMU  பொதுச் செயலர்  அலுவலகத்தில் நடைபெறும் என்று  JCM  NATIONAL COUNCIL - JCA  அமைப்பின்  தென் மண்டல ஒருங்கிணைப்பாளர்  தோழர். N . கண்ணையா அவர்கள் (SRMU -AIRF ) அறிவித்துள்ளார். 

ஏழாவது ஊதியக் குழு தொடர்பான கோரிக்கைகளின் மீதான போராட்டம், ரயில்வே, பாதுகாப்பு, அஞ்சல் துறை உள்ளிட்ட துறைகளில் மைய அரசின்  CORPORATISATION மற்றும் தனியார் மய கொள்கைகளை எதிர்த்து செய்ய வேண்டிய இயக்கங்கள் மற்றும் மாநிலம் முழுதும்  NC  JCM  இன்  JCA  அமைப்பது  குறித்து  இந்தக்   கூட்டத்தில்  விவாதிக்கப்படும்.  

எனவே NFPE  மற்றும் FNPO  சங்கங்களின் அனைத்து மாநிலச் செயலர்கள்/தலைவர்கள்  இந்தக் கூட்டத்தில் தவறாமல்  கலந்துகொள்ளுமாறு  வேண்டப் படுகிறார்கள் .

இவண் 
J . ராமமூர்த்தி , கன்வீனர்,   POSTAL  JCA  மற்றும் 
கன்வீனர் , NFPE  இணைப்புக் குழு , தமிழ் மாநிலம் .

No comments:

Post a Comment