தபால் ஊழியர்களின் மறுபக்கம்:
தபால் ஊழியர்களின் மறுபக்கம்:
சமூக அக்கறையுடன் சேவையாற்றும் தபால் ஊழியர்கள் நாள் தோறும் சந்திக்கும் சவால்களும்,படும் சிரமங்களும் ஏராளம்...
தெளிவான முகவரி இல்லாத கடிதங்கள், முதியோர் உதவித் தொகை பட்டுவாடா செய்தல்,நாய்த் தொல்லை, தினமும் சைக்கிள் சவாரி அலைச்சல்,கிராமப் பகுதிகளில் வயல் வெளி, முள்,காடு,மலை
எனப்பாராமல் காற்று, மழை,வெயில் என ஒவ்வொரு நாளும் சவால்கள் நிறைந்த பயணத்தை தபால்காரர்கள் மேற்கொள்கின்றனர்...
E.D (GDS)ஊழியர்கள்
தபால்துறை ஊழியர்கள் அனைவரும் மத்திய அரசு ஊழியர்கள் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது உண்மையல்ல. அஞ்சல் துறையில் இந்தியா முழுவதும் 6 லட்சம் பேர் பணிபுரிகின்றனர்.
அவர்களில் 2.5 லட்சம் பேர் மட்டுமே நிரந்தர இலாக்கா ஊழியர்கள்.
மீதி 3.5 லட்சம் பேர் இ.டி ஊழியர்கள் (Extra Departmental Agents) அதாவது,பணி நிரந்தரமற்றவரகள். E.D ஊழியர்களுக்கு தினமும் 4 மணி நேரம் மட்டுமே வேலை என்று சொல்லப் படுகிறது. அதன் அடிப்படையில் தான் சம்பளம் வழங்கப்படுகிறது. ஆனால்,அவர்கள், பல மணி நேரமக பணி செய்கிறார்கள்.ஒவ்வொரு நாளும் குறைந்தப் பட்சம் 7-8 கிராமங்களுக்கு செல்கிறார்கள்.நேரம் காலம் பார்க்காமல் பணியாற்றும் இவர்களுடைய மாத ஊதியம் ₹5000 மட்டுமே விடுமுறை கிடையாது. சம்பள உயர்வு கிடையாது.போனஸ் கிடையாது.தொப்பி கிடையாது.சீருடை கிடையாது.மழைக் கோட் கிடையாது. எதுவும் கிடையாது..
பணி நிரந்தரம் என்கிற அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப் படாத வரையில்,பெருமை மிகு இந்திய அஞ்சல் துறைக்கு அதுவொரு கரும்புள்ளியாகவே இருக்கும்...
நன்றி: புதியதலைமுறை வார இதழ்.
No comments:
Post a Comment