Total Pageviews
75,911
Tuesday, 31 March 2015
Monday, 30 March 2015
LATEST POSITION ON PAYMENT OF SALARY AND PENSION ON 01.04.2015
LATEST POSITION ON PAYMENT OF SALARY AND PENSION ON 01.04.2015
அன்புத் தோழர்களுக்கு வணக்கம் ! தமிழக அஞ்சல் மூன்று சங்கத்தின் சார்பில் ஊதியம் மற்றும் PENSION பட்டுவாடா 01.04.2015 அன்று வழங்கவேண்டியும், இது குறித்து ஆந்திரா CPMG அவர்கள் அளித்துள்ள உத்தரவு நகலை இணைத்தும், நேற்றைய தினம் மீண்டும் CPMG TN அவர்களுக்கு கடிதம் அளித்து கோரியிருந்தோம்.
இன்று காலை கர்நாடகா CPMG திரு. M . S . ராமானுஜம் IPoS,( ADDL CHARGE , TN CIRCLE ) அவர்களை கைபேசியில் நம்முடைய அஞ்சல் மூன்றின் மாநிலச் செயலர் தொடர்பு கொண்டு பேசினார். முதலில் இது DIRECTORATE உத்திரவு என்பதால், தன்னால் ஒன்றும் செய்ய இயலாது என்று CPMG அவர்கள் கூறினார்.
அதற்கு நம்முடைய மாநிலச் செயலர் தோழர். J .R . அவர்கள் , ஏற்கனவே இது குறித்து நேற்றைய தினம் நம்முடைய பொதுச் செயலர் தோழர். N .S மூலம் DTE இல் உரிய அதிகாரிகளிடம் பேசியதாகவும் , இது முற்றிலும் CBS சம்பந்தப்பட்ட பிரச்சினை என்றும், சேமிப்புக் கணக்கில்தான் 01.04.2015 அன்று வரவு வைக்கக் கூடாது என்று அறிவுறுத்தப் பட்டுள்ளதாகவும் , இதற்கும் ஊதியம் நேரடி பட்டுவாடா செய்வதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்றும் அதனால் அந்தந்த மாநிலங்களில் இது குறித்து முடிவு செய்துகொள்ளலாம் என்றும் பதில் அளிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
மேலும் இதன் அடிப்படையில் , ஆந்திரா CPMG அவர்கள், 01.04.2015 அன்றே ஊதியம் மற்றும் PENSION - CASH PAYMENT ஆக பட்டுவாடா செய்திட உத்திரவிட்டுள்ளார் என்றும் அதன் நகல் தன்னுடைய இரண்டாவது கடிதத்துடன் CPMG அவர்களுக்கு EMAIL மூலம் நேற்று அனுப்பப்பட்டுள்ளது என்றும் தெரிவித்து தமிழகத்திலும் அது மாதிரி உத்திரவிடுமாறு வேண்டினார்.
இதனைக் கேட்டுக் கொண்ட CPMG அவர்கள் , அப்படியானால் I WILL DO THE NEEDFUL என்று உறுதி அளித்தார். எனவே, இதன் மீது மதியத்திற்குள் உத்திரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
ANOTHER LETTER FROM OUR CIRCLE UNION TO CPMG, TN FOR PAYMENT OF SALARY AND PENSION ON 01.04.2015 AS IN THE CASE OF ANDHRA CIRCLE
ANOTHER LETTER FROM OUR CIRCLE UNION TO CPMG, TN FOR PAYMENT OF SALARY AND PENSION ON 01.04.2015 AS IN THE CASE OF ANDHRA CIRCLE
நம்முடைய கடிதம் போன்றே ஆந்திர மாநிலச் செயலர் கடிதம் அளித்துப் பேசியதில், ஆந்திர மாநிலத்தில் எதிர்வரும் 1.04.2015 அன்று AR மூலம் SALARY PAYMENT மற்றும் PENSION - CASH ஆக அளித்திட இன்று மாலை உத்திரவு இடப்பட்டது. நமது மாநிலத்தில் CPMG இல்லாத காரணத்தால் இதுவரை முடிவு எடுக்கப்பட வில்லை . நிச்சயம் தொலைபேசியில் CPMG அவர்களை தொடர்பு கொண்டு இதற்கான உத்திரவை நாம் பெறுவோம். நமது மாநிலச்சங்க அடுத்த கடிதம் மற்றும் ஆந்திர மாநில CPMG உத்திரவு நகலை கீழே காணவும் .
Thursday, 26 March 2015
TOTAL STRIKE BY ALL 9 NFPE UNIONS THROUGHOUT TAMILNADU CIRCLE ON 26.03.2015
TOTAL STRIKE BY ALL 9 NFPE UNIONS THROUGHOUT TAMILNADU CIRCLE ON 26.03.2015
--------------------------------------------------------------------------------------------------------------------------
கொம்பு இருப்பதை மறந்தும் வண்டி இழுக்கும் மாடுகளாய் ;
குவித்த செந்நெல் விளைத்த கரங்கள்
தமதென்று அறிந்திருந்தும் கும்பிட்டுக் கூழைகளாய் ;
விதி வழி இதுவென்று மதிகேடாய் நடைப்பிணமாய்
எத்தனை நாள் என் தோழா ? வந்த வழி திரும்பிப்பார் !
கண்ட களம் தெரியும் பார் ! கொண்ட வெற்றி புரியும் பார் !
சிங்கமென சிலிர்த்து எழு ! உன் துன்ப விலங்குகள் தூளாகும் !
--------------------------------------------------------------------------------------------------------
பேசிப் பார்த்தோம் ; கேட்டுப் பார்த்தோம் ;
எழுதிப் பார்த்தோம் ; SUBJECTS கொடுத்தோம் ;
அகில இந்திய சங்கத்திற்கு எடுத்துச் சென்றோம் ;
ஆர்ப்பாட்டம் செய்தோம் ; தார்ணா இருந்தோம் ;
NOTICE போட்டோம் ; போஸ்டர் போட்டோம் :
வேலை நிறுத்த நோட்டீஸ் அளித்தோம் ;
கோரிக்கை மனு கொடுத்தோம் ;
தொழிலாளர் நல ஆணையர் முன் சென்றோம் ;
அங்கேயும் அவர்கள் வரவில்லை ;
மீண்டும் மீண்டும் அழைத்தும் வரவில்லை ;
இத்தனை செய்தும் கேளாச் செவியினராய்
ஒரு மாநில நிர்வாகம் ; அதன் அங்கங்களாய்
எத்தனை எத்தனை அதிகாரிகள் ;
எங்களுக்கு TARGET தான் முக்கியம் ;
அடுத்த மாதம் பார்த்துக் கொள்ளலாம்
என்று அலட்சியமாய் ஒரு கடிதம் ;
எந்த TARGET லும் தமிழகமே முதலிடம் ;
CBS MIGRATION தமிழகம் முதலில் ;
CIS MIGRATION தமிழகம் முதலில் ;
முதல் ATM தமிழகத்தில்தானே ?
SSA கணக்கு பிரதமரின் PILOT PROJECT
ஒரு கோடி கணக்குகள் ஒரு மாதத்தில் வேண்டும்
இதிலும் தமிழகம் முதலிடம் ;
கடந்த 23.03.2015 FINACLE இல் எடுக்கப் பட்ட கணக்கு
பிரதம அமைச்சரின் குஜராத்தில் 541
மேற்கு வங்கத்தில் 340
ஓடிஷா வில் 1201
கர்நாடகாவில் 688
தமிழ்நாடு 3349
பிரதம அமைச்சரின் குஜராத்தில் ஞாயிறு அலுவலகம்
திறக்க வில்லை என்பதே செய்தி ;
விளைத்த கரங்கள் எவருடையவை ?
தோழர்கள் சிந்திய வியர்வை எவ்வளவு ?
எடுத்துச் சொல்ல வார்த்தை உண்டா ?
இத்தனை செய்தும் தொழிலாளி யின் உரிமைகள்
மறுக்கப் படுகின்றனவே !
தொழிலாளியின் கோரிக்கைகள் கேட்கப் படாததால்
உரத்துச் சொல்லவே ஆர்ப்பாட்டம் ! தார்ணா !
உண்ணாவிரதம் எல்லாம் ; அந்த குரல் கூட
மறுக்கப்படுகிறதே ; குரல்வளைகள் நெரிக்கப்படுகின்றனவே !
திறக்கப் படுகின்ற ஞாயிறுகளுக்குப் பதில்
இருக்கின்ற நாளில் வேலை நிறுத்தம் வேண்டாம் என்று கூறி
பேச்சு வார்த்தை நடத்திடுவோம் என்று இறங்கிவர
மனமே இல்லை ; தொழிலாளி என்ன அடிமை இயந்திரமா ?
வேலை நிறுத்தம் விரும்பி ஏற்றதல்ல ;
வேலை நிறுத்தத்தில் தள்ளியது நிர்வாகம் ;
இது முடிவல்ல ! ஆரம்பம் ! தொழிலாளி போர் ஆயுதம் பூண்டு விட்டான் !
உரிமை கேட்டு போர் ! உழைக்கும் தொழிலாளி யின்
உணர்வுகள் மதிக்கப்பட போர் !
CORPORATE கம்பெனி களில் கூட சனி , ஞாயிறு விடுமுறை உண்டு !
MODEL EMPLOYER ஆன மத்திய அரசுத்துறையில்
தொடர்ந்து ஞாயிறுகளில் வேலை நாள் ! அப்பட்டமான அரசியல் அமைப்புச் சட்ட மீறல் ! மனித உரிமை மீறல் !
UNFAIR LABOUR PRACTICE என்று தொழிலாளர் நல
ஆணையரே பதிவு செய்யும் அவலம் ;
இதுவா நிர்வாகம் ; இதுவா அரசாங்கம் ?
நடத்துபவர்கள் இந்தியர்கள் தானே ?
அவர்களுக்கு இந்திய அரசியல் அமைப்பு சட்டங்கள்
தொழிலாளர் நல சட்டங்கள் செல்லாதா ?
ஒரு நாள் இந்த நிலைமைக்கெல்லாம் மாறுதல் உண்டு
அந்த மாறுதலை செய்வதற்கு நல்ல நாள் இன்று !
தமிழகமெங்கும் வெற்றி ! வெற்றி ! வேலை நிறுத்தம் வெற்றி !
என்ற சங்கநாதம் முழங்கப் படுகிறது !
இந்த வேலை நிறுத்தம் ஒரு வரலாற்றுப் பதிவு !
இந்த வேலை நிறுத்தம் தமிழகத்தின் ஓர் எழுச்சி !
ஒன்று படுவோம் ! போராடுவோம் !
------------------------------------------
Tuesday, 24 March 2015
26.03.2015 அன்று ஒரு நாள் போராட்டத்தை முழுமையாக வெற்றி பெற செய்வோம் .
அன்பார்ந்த தோழர்களே !
டார்கெட் இல் தொடங்கி டார்செரில் முடிந்திருக்கும் நிர்வாகத்தின் எதேச்சதிகார போக்கை கண்டித்தும் ,,பாடாவதியான கம்ப்யூட்டர் மற்றும் உபகரணங்களை மாற்றிட கோரியும் ,தபால் காரர் பணி இடங்களில் அவுட் சைடர்களை பார்க்க அனுமதிக்கவும் ,தென் மண்டலத்தில் நடக்கும் தொழிற் சங்க பழிவாங்குதலை கண்டித்தும் ,கோட்ட கண்காணிப்பாளர் கொடுத்த எல்லா தண்டனைகளையும் ( 3மாதம் இன்கி ரிமென்ட் வெட்டு என்றால் 6 மாதமாக உயர்த்துவது ,6 மாதத்தை 1வருடம் ,1 வருடத்தை 3வருடம் என விதி 16 இல் கீழ் கொடுக்கப்பட்ட தண்டனைகளை தானாகவே REVIEW செய்து தனக்குதானே மகிழ்ந்து கொள்ளும் மண்டல நிர்வாகம் ) உயர்த்துவது போன்ற மனிதாபமற்ற கொடுமைகளை கட்டு படுத்த நடைபெறும் 26.03.2015 அன்று ஒரு நாள் போராட்டத்தை முழுமையாக வெற்றி பெற செய்வோம் .
Incharge SPM/treasurer தோழர்களுக்கு ஒரு வேண்டுகோள்
கோட்ட அலுவலகத்தில் இருந்து தகவல் கேட்டாலும் /கேட்காவிட்டாலும் 25.03.2014 மாலைக்குள் நீங்கள் வேலைநிறுத்தத்தில் பங்குபெறுவது குறித்து ஈமெயில் மூலம் கீழ் கண்ட கடிதத்தை கொடுக்கவும் .
டார்கெட் இல் தொடங்கி டார்செரில் முடிந்திருக்கும் நிர்வாகத்தின் எதேச்சதிகார போக்கை கண்டித்தும் ,,பாடாவதியான கம்ப்யூட்டர் மற்றும் உபகரணங்களை மாற்றிட கோரியும் ,தபால் காரர் பணி இடங்களில் அவுட் சைடர்களை பார்க்க அனுமதிக்கவும் ,தென் மண்டலத்தில் நடக்கும் தொழிற் சங்க பழிவாங்குதலை கண்டித்தும் ,கோட்ட கண்காணிப்பாளர் கொடுத்த எல்லா தண்டனைகளையும் ( 3மாதம் இன்கி ரிமென்ட் வெட்டு என்றால் 6 மாதமாக உயர்த்துவது ,6 மாதத்தை 1வருடம் ,1 வருடத்தை 3வருடம் என விதி 16 இல் கீழ் கொடுக்கப்பட்ட தண்டனைகளை தானாகவே REVIEW செய்து தனக்குதானே மகிழ்ந்து கொள்ளும் மண்டல நிர்வாகம் ) உயர்த்துவது போன்ற மனிதாபமற்ற கொடுமைகளை கட்டு படுத்த நடைபெறும் 26.03.2015 அன்று ஒரு நாள் போராட்டத்தை முழுமையாக வெற்றி பெற செய்வோம் .
Incharge SPM/treasurer தோழர்களுக்கு ஒரு வேண்டுகோள்
கோட்ட அலுவலகத்தில் இருந்து தகவல் கேட்டாலும் /கேட்காவிட்டாலும் 25.03.2014 மாலைக்குள் நீங்கள் வேலைநிறுத்தத்தில் பங்குபெறுவது குறித்து ஈமெயில் மூலம் கீழ் கண்ட கடிதத்தை கொடுக்கவும் .
STRIKE INTIMATION LETTER FOR SPMS/TREASURERS
FROM
TO
The supdt of pos
Namakkal dn
Namakkal 637001
SIR,
As per the direction of COC of NFPE Tamilnadu, I decided to participate in the proposed one day
strike on 26.03.2015 letter follows
Thanking you
Yours faithfully,
Sd
Name
Designation
PLEASE SEND THROUGH E MAIL
TO
The supdt of pos
Namakkal dn
Namakkal 637001
SIR,
As per the direction of COC of NFPE Tamilnadu, I decided to participate in the proposed one day
strike on 26.03.2015 letter follows
Thanking you
Yours faithfully,
Sd
Name
Designation
PLEASE SEND THROUGH E MAIL
Monday, 23 March 2015
தமிழக என். எப்.பி .இ . இணைப்புக் குழுவின் வெற்றி ! தமிழக அஞ்சல் மூன்று மாநிலச் சங்கத்தின் வெற்றி ! !
தமிழக என். எப்.பி .இ . இணைப்புக் குழுவின் வெற்றி !
தமிழக அஞ்சல் மூன்று மாநிலச் சங்கத்தின் வெற்றி ! !
அன்புத் தோழர்களே ! அஞ்சல் மூன்று மாநிலச் சங்கத்தின் 17.03.2015 கடிதத்தையும் நமது மதிப்புக்குரிய CPMG அவர்களின் 20.03.2015 தேதியிட்ட உத்திரவின் நகலையும் நன்கு படித்துப் பார்க்கவும் !
15 ஆண்டு கால போராட்டத்திற்கு தற்போது நமது வேலை நிறுத்த போராட்டத்தால் கிடைத்த வெற்றிதான் இது !
மாநில அலுவலகம் மற்றும் அனைத்து மண்டல அலுவலகங்களிலும் நீண்ட வருடங்களாக DEPUTATION என்ற பெயரில் இருந்து வரும் ஊழியர்கள் அவர்களது சொந்த கோட்டங்களுக்கே திரும்ப அனுப்பப் படுவார்கள் என்ற உத்திரவே இது !
நம் தமிழ் மாநில அஞ்சல் மூன்று செயலரின் கோரிக்கையை ஏற்று உத்திரவிட்டுள்ள CPMG உயர்திரு. M .S . ராமானுஜன் IP o S அவர்களுக்கு மீண்டும் நன்றி ! இதர கோரிக்கைகளிலும் நாம் உறுதியான வெற்றியைப் பெற வேலை நிறுத்தத்தை தீவிரப் படுத்துங்கள் !
CPMG Orders to all PMGs to Relieve all the Deputationist within April 2015.

Friday, 20 March 2015
நம்முடைய வேலை நிறுத்த போராட்ட அறிவிப்பிற்கு மாபெரும் வெற்றி !
நம்முடைய வேலை நிறுத்த
போராட்ட அறிவிப்பிற்கு மாபெரும் வெற்றி !
அன்புத் தோழர்களுக்கு வணக்கம் !
நம்முடைய அஞ்சல் மூன்றின் வேலை நிறுத்த முக்கிய கோரிக்கைகளில் ஒன்றான, மண்டல மற்றும் மாநில அலுவலகத்தில் பல கோட்டங்களில் இருந்து நீண்ட காலம் DEPUTATION இல் இருக்கும் ஊழியர்கள் அந்தந்த கோட்டங்களுக்கு திருப்பி அனுப்பப்பட வேண்டும் என்பதே . இன்று தொழிலாளர் நல உதவி ஆணையர் முன்னிலையில் நடைபெற்ற CONCILIATORY MEETING இல் இந்தப் பிரச்சினை விவாதிக்கப்பட்டு அதன் மீது எழுத்து பூர்வமாக இன்று பதிவு செய்து மாநில நிர்வாகத்திற்கு அளிக்கப்பட்டது .
இன்று DEPUTATION குறித்த கோப்புகள் மற்றும் ஞாயிறு பணி குறித்த பிரச்சினைகள் நமது மாநிலத்திற்கு ADDL CHARGE ஆக இருக்கும் கர்நாடகா CPMG அவர்களின் உத்திரவுக்கு அனுப்பப்பட்டு காத்திருப்பில் இருந்தது . ஏனெனில் அங்கு வருகை புரிந்த அஞ்சல் வாரிய உறுப்பினர் அவர்களுடன் CPMG CAMP இல் இருந்ததால் அதன் மீது முடிவு எடுக்கப் படவில்லை . பிறகு மாலை 07.00 மணியளவில் முடிவு எடுக்கப்பட்டு இரவே உத்திரவு அனைத்து மண்டலங்களுக்கும் அனுப்பப்பட்டது.
அதன் படி புதிதாக பணியில் சேர்ந்த PA COக்கள் அனைவரும் பணி பயிற்சி முடித்து பணியில் அமர்ந்த உடன் (APRIL மூன்றாவது வாரத்தில் ) ஏற்கனவே CIRCLE OFFICE மற்றும் நான்கு மண்டலங்களிலும் உள்ள மண்டல அலுவலகங்களில் நீண்ட காலமாக DEPUTATION இல் இருக்கும் ஊழியர்கள் திருப்பி அனுப்பப் படவேண்டும் . இந்த செய்தி மாநில நிர்வாகத்தில் இருந்து நமக்கு தெரிவிக்கப்பட்டது . இதற்கான உத்திரவின் நகல் நமது சங்கத்திற்கு நாளை அனுப்பப் படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. .
இந்தப் பிரச்சினை 15 ஆண்டுகளுக்கும் மேலாக நம்முடைய மாநிலத்தில் தீர்க்கப்படாமல் நிலுவையில் இருந்த பிரச்சினை ஆகும் . பல ஊழியர்கள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக DEPUTATION இல் உள்ளார்கள் என்பதே இதற்கு ஆதாரம் . இந்த முடிவு நம் அனைவரின் போராட்ட வீச்சிற்கு கிடைத்த வெற்றி என்றாலும், இப்படி ஒரு முடிவை எடுத்த CPMG திரு. M .S . ராமானுஜன் , IPoS அவர்களுக்கு நம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த ஒட்டு மொத்த உத்திரவின் மூலம் நம்முடைய தோழர். S . சுந்தரமூர்த்தி அவர்களின் உண்ணா விரதக் கோரிக்கையும் மதுரை கோட்டத்திற்கு நிறைவேற்றப்பட்டது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவரும் தன்னுடைய உண்ணா நிலை போராட்டத்தை இன்று முடித்துக் கொண்டார். அவரது போராட்டத்திற்கு நம்முடைய மாநிலச் சங்கத்தின் வீர வாழ்த்துக்கள் ! இதர கோரிக்கைகளை வென்றடைய நாம் போராட்ட வீச்சை அதிகப் படுத்துவோம்.
ஊழியர் ஒற்றுமை ஓங்குக !
வேலை நிறுத்தம் வெல்லட்டும்
Wednesday, 18 March 2015
!TN NFPE COC NOTICE FOR 26.3.2015 ONE DAY STATE WIDE STRIKE RELEASED !
TN NFPE COC NOTICE FOR 26.3.2015 ONE DAY STATE WIDE STRIKE RELEASED !
Tuesday, 17 March 2015
26.03.2015 ஒரு நாள் வேலை நிறுத்தம் !
GO AHEAD ! ORGANISE ! 26.03.2015 ONE DAY STRIKE THROUGHOUT TAMILNADU CIRCLE TO PRESS THE COMMON DEMANDS OF ALL SECTION OF EMPLOYEES !
தமிழகம் தழுவிய அஞ்சல் மூன்று, அஞ்சல் நான்கு, RMS மூன்று , RMS நான்கு, கணக்குப் பிரிவு, நிர்வாகப் பிரிவு, SBCO , GDS , CASUAL/ MAZDOOR/PART TIME /DAILY WAGERS
26.03.2015 ஒரு நாள்
வேலை நிறுத்தம் !
வேலை நிறுத்தம் !
மாநில அஞ்சல் நிர்வாகமே !
ஊழியர்களை கொடுமைப் படுத்தாதே !
TARGET என்ற பெயரில் கசக்கிப் பிழியாதே !
தொழிற் சங்க உரிமைகளை மதித்து நட !
தொழிலாளர்களை பழி வாங்கும் போக்கை கைவிடு !
அனைத்து பகுதியினரின் தேங்கிக் கிடக்கும்
கோரிக்கைகளை தீர்த்து வை !
__________________________________________________________
திருச்சியில் ஒரு திருப்பு முனை !
தமிழக NFPE அமைப்பின் வரலாறு காணாத ஒற்றுமையின் மைல்கல் !
13.03.2015 அனைத்து சங்கங்களின்
மாநிலச் சங்க நிர்வாகிகள் கூட்டம் மாபெரும் வெற்றி !
__________________________________________________________
அன்புத் தோழர்களே ! வணக்கம் !
நமது NFPE தமிழ் மாநில அமைப்பின் ஒன்பது சங்கங்களின் மாநில சங்க நிர்வாகிகளின் கூட்டம் 13.03.2015 அன்று திருச்சி நகரில் SRMU சங்கக் கட்டிடத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. ! NFPE இன் அனைத்து சங்கங்களின் மாநிலச் சங்க நிர்வாகிகள் மிகப் பெரும் எண்ணிக்கையில் கூடினர் !
கூட்டத்திற்கு NFPE தமிழ் மாநில இணைப்புக்குழு தலைவர் தோழர்B.பரந்தாமன் அவர்கள் தலைமை வகித்தார். கூட்டத்தின் நோக்கம் பற்றி இணைப்புக்குழு கன்வீனர் தோழர் J.ராமமூர்த்தி அவர்கள் எடுத்துரைத்தார். கூட்டத்திற்கு 60 லிருந்து 70 நிர்வாகிகள் வரை கலந்து கொண்டது தமிழக தொழிற்சங்க வரலாற்றில் ஒரு திருப்புமுனை !
26.03.2015 ஒருநாள் வேலைநிறுத்தத்தை தமிழகத்தில் சக்தியாக நடத்திடுவோம் என NFPE போர்ப்படை தளபதிகள் சபதம் ஏற்றனர் !
P3 மாநில செயலாளர் தோழர் J.ராமமூர்த்தி,
P4 மாநில செயலாளர் தோழர் G.கண்ணன்,
R3 மாநிலசெயலாளர் தோழர் K .ரமேஷ்,
R4 மாநிலசெயலாளர் தோழர் B.பரந்தாமன்,
GDS மாநிலசெயலாளர் தோழர் R. தனராஜ்,
OS மாநிலசெயலாளர் தோழர் T.E .ரமேஷ்,
P3 மாநில தலைவர் தோழர் J.ஸ்ரீவெங்கடேஷ்,
R3 மாநில தலைவர் தோழர் K.R.கணேசன்,
OS மாநில தலைவர் தோழர் D.சிவகுருநாதன்,
GDS மாநில தலைவர் தோழர் S.ராமராஜ்,
NFPE செயல் தலைவர் தோழர் A .மனோகரன் ,
P3 அகில இந்திய உதவி பொது செயலாளர் தோழர் A .வீரமணி,
GDS அகில இந்திய உதவி பொதுசெயலாளர் தோழர் KC.ராமச்சந்திரன்,
ஆகியோர் வேலைநிறுத்த போராட்டத்தை முழு வெற்றி பெற செய்வோம் என சபதம் ஏற்றனர் !
... 17.3.2015
அந்தந்த மண்டலச் செயலர்கள் பொறுப்பேற்று , அந்தந்த மண்டலங் களில் உள்ள மாநிலச் சங்க நிர்வாகிகளை ஒருங்கிணைத்து கூட்டங்களுக்கான அறிவிப்புகளை செய்திட தீர்மானிக்கப்பட்டது.
மண்டல ரீதியான விளக்ககூட்டங்கள்
மதுரை : 19.03.2015
கோவை : 20.03.205.
திருச்சி : 21.03.2015.
சென்னை : 23.03.2015.
இக்கூட்டங்களில் அனைத்து மாநில செயலாளர்களும் பங்கேற்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மண்டலங்களில் உள்ள மண்டலச் செயலர்கள், மாநிலச் சங்க நிர்வாகிகள் , மண்டல தலைமையிடத்து கோட்டச் செயலர்கள் இணைத்து ஏற்பாடுகள் செய்திட வேண்டுகிறோம் !
அடக்குமுறைக்கு எதிராக, தொழிற்சங்க பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக, ஊழியர்கள் கொடுமைப் படுத்தப் படுவதற்கு எதிராக தமிழகம் தழுவிய வேலை நிறுத்தம் !
ஊழியர் உரிமை காக்கும் போராட்டத்தில் களமிறங்குவோம் !
வேலைநிறுத்தம் வெல்லட்டும் !
ஊழியர் ஒற்றுமை ஓங்கட்டு
Subscribe to:
Posts (Atom)
No comments: