LATEST POSITION ON PAYMENT OF SALARY AND PENSION ON 01.04.2015
அன்புத் தோழர்களுக்கு வணக்கம் ! தமிழக அஞ்சல் மூன்று சங்கத்தின் சார்பில் ஊதியம் மற்றும் PENSION பட்டுவாடா 01.04.2015 அன்று வழங்கவேண்டியும், இது குறித்து ஆந்திரா CPMG அவர்கள் அளித்துள்ள உத்தரவு நகலை இணைத்தும், நேற்றைய தினம் மீண்டும் CPMG TN அவர்களுக்கு கடிதம் அளித்து கோரியிருந்தோம்.
இன்று காலை கர்நாடகா CPMG திரு. M . S . ராமானுஜம் IPoS,( ADDL CHARGE , TN CIRCLE ) அவர்களை கைபேசியில் நம்முடைய அஞ்சல் மூன்றின் மாநிலச் செயலர் தொடர்பு கொண்டு பேசினார். முதலில் இது DIRECTORATE உத்திரவு என்பதால், தன்னால் ஒன்றும் செய்ய இயலாது என்று CPMG அவர்கள் கூறினார்.
அதற்கு நம்முடைய மாநிலச் செயலர் தோழர். J .R . அவர்கள் , ஏற்கனவே இது குறித்து நேற்றைய தினம் நம்முடைய பொதுச் செயலர் தோழர். N .S மூலம் DTE இல் உரிய அதிகாரிகளிடம் பேசியதாகவும் , இது முற்றிலும் CBS சம்பந்தப்பட்ட பிரச்சினை என்றும், சேமிப்புக் கணக்கில்தான் 01.04.2015 அன்று வரவு வைக்கக் கூடாது என்று அறிவுறுத்தப் பட்டுள்ளதாகவும் , இதற்கும் ஊதியம் நேரடி பட்டுவாடா செய்வதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்றும் அதனால் அந்தந்த மாநிலங்களில் இது குறித்து முடிவு செய்துகொள்ளலாம் என்றும் பதில் அளிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
மேலும் இதன் அடிப்படையில் , ஆந்திரா CPMG அவர்கள், 01.04.2015 அன்றே ஊதியம் மற்றும் PENSION - CASH PAYMENT ஆக பட்டுவாடா செய்திட உத்திரவிட்டுள்ளார் என்றும் அதன் நகல் தன்னுடைய இரண்டாவது கடிதத்துடன் CPMG அவர்களுக்கு EMAIL மூலம் நேற்று அனுப்பப்பட்டுள்ளது என்றும் தெரிவித்து தமிழகத்திலும் அது மாதிரி உத்திரவிடுமாறு வேண்டினார்.
இதனைக் கேட்டுக் கொண்ட CPMG அவர்கள் , அப்படியானால் I WILL DO THE NEEDFUL என்று உறுதி அளித்தார். எனவே, இதன் மீது மதியத்திற்குள் உத்திரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
No comments:
Post a Comment