தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்க வேண்டும் : பிரதமர் மன்மோகன் சிங்
1948-ஆம் ஆண்டின் தொழிலாளர் நல சட்ட திருத்த மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினர். தொழில்துறை மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மன்மோகன் சிங், தேசிய அளவிலான தொழிலாளர் பாதுகாப்பு நிதி அமைக்கவேண்டும் என்ற கோரிக்கையையும் மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தெரிவித்தார்.
"பணவீக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்தினால் அதனை வரவேற்கிறோம். இவற்றை எவ்வாறு அமல்படுத்துவது என்ற நடைமுறைகளில் கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. இந்த விவகாரகங்களில் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண மத்திய அரசு தயாராக உள்ளது" என இந்திய பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
No comments:
Post a Comment