Total Pageviews

Monday, 2 November 2015

டிசம்பர் 1மற்றும் 2 ஆகிய இரண்டு நாள் வேலைநிறுத்தம்

   முக்கிய செய்திகள் 

           டிசம்பர் 1மற்றும் 2 ஆகிய இரண்டு நாள் வேலைநிறுத்தம் 
            
 எதிர்வரும் டிசம்பர் 1 மற்றும் 2ம்  தேதிகளில்  நடைபெறவுள்ள  வேலைநிறுத்தம் தொடர்பாக  எதிர்வரும் 6.11.2015 அன்று மாநில , கோட்ட மட்டங்களில் அளிக்கப்படவேண்டிய வேலை நிறுத்த நோட்டீஸ் மற்றும் ஆர்பாட்டம்  குறித்தும் , 6.11.2015 அன்று சென்னையில் நடைபெற உள்ள  வேலை நிறுத்த  சிறப்புக் கூட்டம் குறித்தும் , மாநிலம் முழுவதும் நடைபெற உள்ள  பிரச்சார இயக்கங்கள்  குறித்தும்  இதர சங்கங்களுடன் கலந்துகொண்டு  தமிழ் மாநில  NFPE  இணைப்புக் குழு மூலம்  அறிவிப்புகள்  வெளியிடப்படும் என்பதை   தமிழ்  மாநில அஞ்சல் மூன்று சங்கத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.

மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன   போராட்ட அறிவிப்பு           
  
1. ஊதியக் குழு தொடர்பான கோரிக்கைகளை நிறைவேற்றாத மத்திய அரசைக் கண்டித்தும் , 

2. ஊதியக் குழுவே அறிக்கையை சமர்ப்பிக்க தயாராக இருந்த போதும்  வேண்டுமென்றே  நீட்டிப்பு அளித்து காலதாமதம் செய்யும் மத்திய அரசின் போக்கைக் கண்டித்தும்,  

3. தன்னிச்சையான அமைப்பான  7 ஆவது ஊதியக் குழுவுக்கு , அதன் சுதந்திர செயல்பாட்டை முடக்கும் வகையில் நிதிச்சுமை குறித்து அறிவுறுத்தியுள்ள  மத்திய  நிதி அமைச்சகத்தின் தலையீடு குறித்து கண்டித்திடவும், 
 தோழர்கள் அனைவரும் அனைத்து இயக்கங்களிலும் முழுமையாக பங்கேற்குமாறு கேட்டு கொள்கிறோம் .

No comments:

Post a Comment