Total Pageviews

Wednesday 7 August 2013

விண்டோஸ் வலது கிளிக் பயனுள்ள நுட்பங்கள்

சில விண்டோஸில் முந்தைய பதிப்பிலிருந்து எப்போதும் வலது கிளிக்கின் மூலம் பயனுள்ள சில வசதிகள் கிடைக்கவே செய்கின்றன.
அவ்வாறு கிடைக்கும் மூன்று முக்கிய வசதிகள் பற்றி இங்கே பார்வையிடலாம். இவை விண்டோஸ் 7 மற்றும் 8 இல் பயன்படுத்த முடியும்

டெஸ்க்டாப் ஐகானை பெரிதாக்கிட

டெஸ்க்டாப்பின் எதுவுமற்ற இடமொன்றில் வலது கிளிக்  செய்து பின்னர் வியூவிற்கு மவுஸை கொண்டுசெல்ல வேண்டும். அங்கே Medium icons or Large icons என்பவற்றை தேர்வு செய்தால் டெஸ்க்டாப் ஐகான்கள் பெரிதாகிவிடும்.

குறிப்பிட்ட புரோகிராம் ஒன்றின் அண்மையில் பயன்படுத்திய விடயங்களை பார்வையிட

இணைய உலாவி அல்லது ஏனைய புரோகிராம்கள் மூலம் மிக  அண்மையில் நீங்கள் திறந்த விடயங்களை பார்வையிட அல்லது அவற்றை மீண்டும் ஒருமுறை திறப்பதற்கு டெஸ்க்டாப்பில் குறிப்பிட்ட ஐகானின் மீது வலது கிளிக் செய்யுங்கள். அது எம் எஸ் ஆபிஸாக இருந்தால் recent documents என்றும் உலாவியெனில் most-visited sites, எனவும் பட்டியலிடப்படும். இதன் மூலம் உங்களுக்கு தேவையானவற்றை வேகமாக அணுக முடியும்.

Start Menu அல்லது Taskbar இல் Bin செய்ய

வலது கிளிக்கின் மூலம் அடிக்கடி பயன்படுத்தும் உங்களின் விருப்பத்திற்குரிய புரோகிராமொன்றை Start Menu அல்லது Taskbar இல் bin செய்யலாம்.

இதன் மூலம் அவை திறந்த நிலையிலேயே வைத்திருக்க முடியும் வேகமாக அவற்றை அணுகவும் முடியும்.

இதை செய்வதற்கு வலது கிளிக் செய்து Bin to taskbar ஐ அழுத்துங்கள். வலது கிளிக் நுட்பங்களில் உங்களுக்கு தெரிந்தவற்றை எமது வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள் அவை மற்றவருக்கும் உதவியாக இருக்குமல்லவா?

பிடித்திருக்கா? பகிருங்கள்!

No comments:

Post a Comment