Sunday, September 1, 2013
TN NFPE COC DECIDES TO HOLD THE PROGRAMME ON 3RD SEPTEMBER 2013
அன்புத் தோழர்களுக்கு வணக்கம். ! நம்முடைய மத்திய அரசு ஊழியர்
மகா சம்மேளனம் மற்றும் நம்முடைய NFPE சம்மேளனம் எடுத்த
முடிவினை அமல் படுத்திட வேண்டி,
புதிய பென்ஷன் திட்டத்திற்கான மசோதா
பாராளுமன்றத்தில் எதிர் வரும் செப்டம்பர் 2 அன்று விவாதத்திற்கு எடுத்துக்
கொள்ளப் படுவதால் , தமிழ் மாநில NFPE சம்மேளனத்தின் கீழ் உள்ள உறுப்பு
சங்கங்கள் அடங்கிய தமிழ் மாநில அஞ்சல் -RMS இணைப்புக் குழுவின்
சார்பாக
எதிர்வரும் 03.09.2013 அன்று தமிழகம் தழுவிய அளவில் இந்த அறைகூவலை ஏற்று நடத்திட வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.
அதே தேதியில் தமிழகத்தில் , சென்னை
மாநகரில் உள்ள கோட்டங்கள் உட்பட, அனைத்து தலைமை அஞ்சலக / கோட்ட அலுவலக
வாயிலில் PFRDA மசோதாவை எதிர்த்து உணவு இடைவேளை கண்டன ஆர்ப்பாட்டமோ
அல்லது மாலை நேர கண்டன ஆர்ப்பாட்டமோ தவறாமல் நடத்திட வேண்டுகிறோம்.
தமிழக அஞ்சல் மூன்றின் மாநிலத் தலைவரும்
மாநிலச் செயலரும் மதுரை கோட்டச் சங்கங்கள் ஏற்று நடத்திடும்
ஆர்ப்பாட்டத்தில் அதே தேதியில் கலந்து கொள்வார்கள் என்று அறிவிக்கிறோம்.
இதற்கான ஏற்பாடுகளை மதுரை அஞ்சல் மூன்று கோட்ட சங்கம் ஏற்று நடத்திட வேண்டுகிறோம்.
இதற்கான செய்திகளை பத்திரிகை மற்றும் தொலைக் காட்சி ஊடகங்களுக்கு தவறாமல் அளித்து மத்திய அரசின் கவனத்தை
ஈர்த்திட வேண்டுகிறோம்.
நமது போராட்டம் வெல்லட்டும் !
PFRDA மசோதா முடங்கட்டும் !
No comments:
Post a Comment