மேற்கு மண்டல PMG உடன் இரு மாதங்களுக்கு ஒரு முறையான பேட்டி
மேற்கு மண்டலத்தின் BI-MONTHLY MEETING எதிர் வரும் 25.11.2013 அன்று நடைபெற அறிவிக்கப் பட்டுள்ளது. மேற்கு மண்டலத்தில் உள்ள கோட்ட/ கிளைச் செயலர்கள் தங்கள் பகுதிப் பிரச்சினைகளை மாநில/ மண்டலச் செயலரிடம் எதிர்வரும் 13.11.2013 க்குள் கிடைக்குமாறு அனுப்பி வைத்திட வேண்டப் படுகிறார்கள்
மேலும் நாம் ஏற்கனவே மேற்கு மண்டல கோட்ட/ கிளைச் செயலர்களின் கூட்டத்தில் அறிவித்தபடி , கோட்ட / கிளைச் செயலர்களிடமிருந்து பெறப்பட்ட பிரச்சினைகள் பட்டியலிடப்பட்டு MEMORANDUM ஆக தயார் செய்யப்பட்டு தற்போது PMG, WR க்கு அனுப்பப்பட வுள்ளது . அதன் நகல் மேற்கு மண்டலத்தில் உள்ள அனைத்து கோட்ட/ கிளைச் செயலர்களுக்கும் அனுப்பப்படுகிறது . அதன் மீது தங்கள் கருத்துக்களை எதிர்வரும் 23.11.2013 க்குள் மாநில/ மண்டலச் செயலருக்கு தெரிவித்திட வேண்டுகிறோம். அதன் மீது 25.11.2013 அன்று PMG,WR அவர்களுடன் விவாதிக்கப்படும் என்பதை இந்த வலைத்தள செய்தியாக பதிவு செய்கின்றோம்.
இந்த செய்திகளை முன்னறிவிப்பாக கொண்டு மாநிலச் சங்க நிர்வாகிகள் மற்றும் கோட்ட/ கிளைச் செயலர்கள் செயல் படுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
அன்புடன்
மாநிலச் செயலர் , அஞ்சல் மூன்று ,
தமிழ் மாநிலம்.
No comments:
Post a Comment