Results of Direct Recruitment - PA/SA (April/Aug-2013) declared in Tamilnadu Circle-
அன்புத் தோழர்களே ! இளைய தோழர்கள் இடைவிடாது கேட்டுக் கொண்டிருந்த எழுத்தர் தேர்வின் முடிவுகள் தமிழக அஞ்சல் வட்டத்தில் இன்று வெளியிடப்பட்டது . கீழே காணும் இணைப்பை ' கிளிக் " செய்து தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ள வேண்டுகிறோம்.-
புதிதாக இந்த இலாக்காவில் இணைய உள்ள இளைய உள்ளங்களுக்கு , எங்கள் இளைய தோழர் மற்றும் தோழியர்களுக்கு எதிர்காலம் இனிதாக அமைய NFPE அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் மூன்றாம் பிரிவு தமிழ் மாநிலச் சங்கத்தின் அன்பான வாழ்த்துக்கள் !
உங்கள் எதிர்காலத்திற்கு , உங்கள் உரிமைகளுக்கு , உங்களுக்காக நீங்களே எங்களுடன் இணைந்து குரல் கொடுத்திட நீங்கள் இணைய வேண்டிய சங்கம் AIPEU GROUP 'C' சங்கம் !
என் அன்பான கோட்ட/ கிளைச் செயலர்களே !
புதிய தோழர்களை நீங்கள் அரவணைத்து நமது சங்கத்தின்
தியாகங்களை / வெற்றிகளை எடுத்துச் சொல்லி நம்முடன்
இணைந்து பணியாற்ற அழைப்பு விடுத்திடுங்கள் !
பணியில் சேர அவர்கள் வரும் நாட்களில் அவர்களுக்கு ஆதரவாக இருந்து உதவிடுங்கள் !
அவர்களின் தேவைகளை அறிந்து உதவிக் கரம்
நீட்டிடுங்கள் !
இளைய தோழர்களான உங்களை
நாங்கள் வருக வருக என்று இரு கரம் நீட்டி வரவேற்கிறோம் !
அன்புடன்
J . இராமமூர்த்தி,
மாநிலச் செயலர், அஞ்சல் மூன்று
தமிழ் மாநிலம்.
No comments:
Post a Comment