Total Pageviews

Saturday 22 June 2013

ரூபாய் சரிவால், பெட்ரோல் விலை உயரும்

ரூபாய் சரிவால், பெட்ரோல் விலை உயரும்
பதிவு செய்த நாள் -
ஜூன் 21, 2013  at   9:00:35 PM
 
அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாய் மதிப்பு கடந்த ஒரு மாதமாகவே சரிவுப் பாதையில் பயணித்துக் கொண்டுள்ள நிலையில், இந்த ஒவ்வொரு ரூபாய் சரிவும், இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவை எப்படி பாதிக்கிறது எனத் தெரிய வந்துள்ளது.
இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்ட புள்ளிவிபரத்தின்படி, அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பின் சரிவில், ஒவ்வொரு ரூபாய் சரிவிலும், கச்சா எண்ணெய் இறக்குமதி செலவு, மாதத்துக்கு 400 கோடி ரூபாய் வரை அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்த ரூபாய் மதிப்பு சரிவு, ஓராண்டு வரை நீடித்தால், ஆண்டுக்கு சுமார் 5,000 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும், அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாய் மதிப்பு 1 ரூபாய் 50 காசு வரை வீழ்ச்சி கண்டுள்ளதால், இந்த மாத இறுதியில் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் எண்ணெய் நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரூபாய் மதிப்பு, நேற்று 60 ரூபாயைத் தொட்ட நிலையில், இன்று அது 59 ரூபாய் 60 காசுகளை ஒட்டி வணிகமாகிக் கொண்டிருக்கிறது.

மேலும் இது தொடர்பான செய்திகள்:

No comments:

Post a Comment